Tuesday, 27 March 2018

maadi thottam ideas


மாடித்தோட்டம் என்றால் என்ன ? 

நம் வீட்டின் மாடியில் செடி, கொடி, பூ, காய் கனிகளை வளர்ப்பது. அது மாடியாகவோ, பால்கனியாகவோ இருக்கலாம். முன்பு வீட்டைச்சுற்றியிருந்த தோட்டத்திற்கு இடம் இல்லாமல் போனதால் அதை மாடிக்கு மாற்றம் செய்துவிட்டோம். நிலம் வாங்கி பயிர் செய்யும் பிரச்சனைகள் இதில் இல்லாதது, இதை வரவேற்கத்தக்கதாக மாற்றியுள்ளது.

மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி மாடி வீடுகள், அலுவலக வளாகங்கள் ஆகிய இடங்களில் இடங்களில் அமைக்கலாம். மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியது என்ன? மொட்டைமாடியில் உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்து விடாதபடி வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசி தயார் செய்து கொள்ள வேண்டும்.

செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள்வரும்?

ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்) ஆபத்தானவை. இவ்வகை செடிகள் தரையை துளைத்து கட்டிடத்தை சேதமடையச் செய்துவிடும். ஜல்லிவேர்கள் கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில் வளர்ப்பதற்கு சிறந்தவை. நாம் மாடித்தோட்டத்தில் பயிரிடும் பெரும்பாலன காய்கறிகள், பழங்கள் ஆகியவை ஜல்லி வேர் கொண்டவைகளாகும்.

மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்கு என்ன பயன்?

நாம் அனைவரும் அதிகப்படியான வேலைப் பளுவினால் உடலாலும், மனதாலும் மிகவும் சோர்வடைகின்றோம். முக்கியமாக மனச்சோர்வடையும் போது நமக்கு மாடித்தோட்டம் அருமையான நண்பனாகவும், நமக்கு பெரும் மன அமைதியையும் மற்றும் புத்துணர்ச்சியையும் தருகின்றது. நாம் பார்த்து, பார்த்து வளர்க்கும் ஒவ்வொரு செடியும், அதன் வளர்ச்சியை காணும்போது மனதுக்கு கிடைக்கும் தன்னிறைவும், சந்தோசமும் அளிக்கின்றது. மேலும் இதுவே நமக்கு வரும் பெரும்பாலான நோய்களை விரட்டுகிறது.


நமது வீட்டை வெயிலின் வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து டிகிரி வரை குறைத்து இயற்கையான ஏசியாக செயல்படுகிறதுஅதிக வெயில், குளிர் மற்றும் இரைச்சலிலிருந்து வீட்டை பாதுகாக்கிறது
நாமே வளர்த்த சத்தான காய்கறிகள், கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது. நம் குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம் ஏற்படுகிறது. அவர்களும் நம்மிடமிருந்து நல்ல விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது.